Posts

பணம் சேர : மகாலட்சுமியின் அருள் கிடைக்கணுமா?... கணவனின் கால்களை பிடித்து விடுங்க கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள். சென்னை: ஓயாது அலை வீசும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை மகாலட்சுமி பிடித்து விட்டுக்கொண்டிருப்பார். இந்த குறியீடு ஆணாதிக்கத்தை குறிப்பதல்லவாம். கணவனின் கால்களை பிடித்து விட்டால் செல்வம் பெருகும் என்பதை குறிக்கத்தானாம். அதெப்படி கணவன் காலை பிடித்தால் செல்வம் சேரும் என்கிறீர்களா? இதை படிங்க உங்களுக்கு புரியும். மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர். Why is Lakshmi sitting near the legs of Lord Vishnu ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குகீழ் வருகின்றது. அதேசமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டது என்று முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்‌. ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இப் பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகி ன்றார்கள். [புரட்டாசி சனிக்கிழமையில் மகா பிரதோஷம்: விரதத்தின் மகிமை தெரியுமா?] மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே ஆகும். அந்த உறவில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்பொழுது, வாழ் க்கை சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். கணவனின் காலை மனைவி பிடித்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் அதிகரிக்கும் என்றும், வீட்டில் யோகம் பிறக்கும். மகாவிஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு இதுதான் காரணமாம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் லட்சுமிதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள். இதே போல எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்கள் வீட்டில் லட்சுமி ஆனந்தமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். இதை படிப்பவர்கள் எளிதாக கோடீஸ்வரர் ஆக இப்படி ஒரு வழி இருக்கையில் பணத்திற்காக ஏன் டென்சன் ஆக வேண்டும். இரவு உறங்கும் போது கணவனின் காலை பிடித்து விடுங்க அப்புறம் பாருங்க வீட்டு அம்மணிகளின் பர்ஸ்களில், பீரோவில் சும்மா பணம் நிறையும். காலில் விழுவது தப்பில்லைங்க..கணவர் காலை தினமும் பிடிச்சு விடுங்க கோடீஸ்வர யோகம் ஓடி வரும்

ஆண்டு விழா: *தெரிந்து கொள்வோம்:* *25 ஆண்டுகள் - வெள்ளி விழா* 30 ஆண்டுகள் - முத்து விழா 40 ஆண்டுகள் - மாணிக்க விழா 45 ஆண்டுகள் - இரத்தின விழா *50 ஆண்டுகள் - பொன் விழா* 55 ஆண்டுகள் - மரகத விழா 60 ஆண்டுகள் - வைர விழா 65 ஆண்டுகள் - நீல சபையர் விழா 70 ஆண்டுகள் - பிளாட்டினம் விழா 75 ஆண்டுகள் - பவள விழா 80 ஆண்டுகள் - அமுத விழா *100 ஆண்டுகள் - நாற்றாண்டு விழா*

ஈர்ப்பு விதி சாராம்சம்: "ENERGY" *"POWER OF ENERGY"* ENERGY இரண்டு வகைகள்: *01. POSITIVE ENERGY* *02. NEGATIVE ENERGY.* நேற்று என்ன *ENERGY* யில் நீங்கள் இருந்தீர்களா அது தான். நீங்கள் *இன்றைய தினத்தில்* இருப்பது இன்று நீங்கள் என்ன *ENERGY* யில் இருக்கிறீர்களோ அது தான் உங்களது *நாளைய எதிர்காலம்.* நீங்கள் *POSITIVE ENERGY* யில் இருந்தால் *POSITIVE ENERGY* சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே உங்களால் *ஈர்க்கப்படும்* அல்லது உங்களை *தேடி* வரும். *பணம், நல்ல RELATIONSHIP,* சந்தோஷம் நல்ல POSITIVE வான மனிதர்கள், எதிர்பாராத விதமாக *புதிய வாய்ப்புகளோடு உங்களது LIFESTYLE* லே வேற மாதிரி இருக்கும். *NEGATIVE ENERGY* யில் நீங்கள் இருந்தால். நிறைய பிரச்சனைகள் உங்களை தேடி வரும். உங்களது உடம்பில் நிறைய நோய்கள் வரும். *நெகடிவ் எண்ணங்கள்* இருந்தால் உங்கள் *உடலில் நோய்* வந்து நிரந்தரமாக குடிகொள்ளும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களில் *தடங்கள்* ஏற்படும். உங்களை சுற்றி இருப்பவர்களும் *NEGATIVE ENERGY* யை சார்ந்து இருப்பார்கள். உங்களுக்கு *அடிமேல் அடி* விழுந்து கொண்டே இருக்கும். இந்த *நெகட்டிவ் எண்ணங்கள்* கொண்டவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை, பிரச்சினை என்றே ஓடி கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து இருப்பவர்களும் அதே எனர்ஜியையே அதிகமாக அவர்களும் ஈர்ப்பார்கள். *செய்ய கூடாதது? என்ன?* 01. SOCIAL MEDIA NEWS TV Drama ல் *நெகடிவான விஷயங்களை* பார்க்காதீர்கள் *AVOID* பன்னுங்கள்.(நீங்கள் Social Media ல் எதை அதிகமாக பார்க்கிறீர்களோ) அதையே நீங்கள் அதிகமாக *உங்கள் வாழ்க்கையிலும் ஈர்ப்பீர்கள் அதுவே வாழ்க்கையிலும் அதிகமாக நடக்கும்.* அதுவே உங்கள் கண்முன் அதிகமாக வந்து நிற்கும். 02. *NEGATIVE* பேசும் மனிதர்களிடம் இருந்து தயவு செய்து *விலகியே* இருங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் *முன்னேற்றம்* தடுக்கப்படும்/ஒடுக்கப்படும். 03. *ACCIDENT* சம்பவங்களை அதிகமாக (நேரில்/SOCIAL MEDIA) பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 04. *வாஸ்து ,ஜோசியம் , ஜாதகம்* பார்த்து எதிர்மறையாக நடந்து விடுமோ! கிரக சூழ்நிலை நமக்கு கெட்டு இருக்குமோ! நமக்கு இப்படி ஆகிவிடுமோ! அப்படி ஆகி விடுமோ! என்ற *எதிர்மறை எண்ணங்களை* விட்டொழியுங்கள். நமது *எண்ணங்கள்,சொல்,செயல்* மிகச்சிறப்பாக இருந்தால் எந்தவொரு ஜாதக தோஷமும் நம்மை ஒன்றுமே செய்யாது. அட நமது எண்ணங்கள் உயர்வாகவும் சரியாகவும் இருந்தால் நமக்கு எந்தவொரு தோஷமும் ஏற்படாதுங்க. நமது மனம் *குப்பையானால்* நமது எண்ணங்கள் *கெடுதல்* நினைத்தால் மட்டுமே நமக்கு அனைத்து *கஷ்டங்களும் தோஷங்களும்* ஏற்படும். அந்த தோஷங்களுக்கு பரிகாரம் நீங்கள் *நல்லது நினைப்பது* மட்டுமே. நீங்கள் எந்தளவிற்கு நல்ல *பாஸிட்டிவான எண்ணங்களை* நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் நெகட்டிவ் எனர்ஜியை(தோஷங்களை) விலக்குகிறீர்கள் என்று அர்த்தம். கோயிலுக்கு செல்லும் போது உங்கள் மனதில் எந்தவொரு *நெகட்டிவான எண்ணங்களும்* ஏற்படுவதில்லை! அங்கே அதிகமான *பாஸிட்டிவான எண்ணங்களே* உதயமாகின்றன. *பாஸிட்டிவான எண்ணங்களை* வளர்த்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் *ஜெயமே.* உங்கள் வாழ்க்கையில் நெகட்டிவான எண்ணங்களை கொண்டால் அனைத்தும் *வீழ்ச்சியே!* *"எண்ணம்/மனம் போல் வாழ்வு"* 05. *சகுனங்கள்* பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 06. *கிழிந்த ஆடைகள்* மற்றும் *அழுக்கான ஆடைகள்* உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். 07. *சோகமான பாடல்கள்/Love failure song* கேட்பதை அறவே நிறுத்த வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் அதிகமாக ஈர்க்கும். சில பேரு இதையே பெருமையாக WhatsApp status ஆக வைத்து கொண்டு சுற்றுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் சோகங்கள் துக்கங்கள் வலிகள் வேதனைகள் மிக மிக அதிகமாக ஈர்க்கப்படும். அவர்களுடைய *WhatsApp status* ஐ நீங்கள் அதிகமாக பார்த்தாலும் நீங்களும் அதையே *ஈர்க்கப்படுவீர்கள்* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *"சோகம் இன்னொரு சோகத்தை ஈர்க்கும்.* *மகிழ்ச்சி மற்றொரு மகிழ்ச்சியை ஈர்க்கும்.* 08. எப்பொழுதும் வீட்டையும் உங்கள் கைகளையும் (முழு உடலையும்) சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். முடிகள், அழுக்கடைந்த காகிதங்கள் உங்கள் வீட்டில் *பணம் (மஹாலட்சுமி)* வருவதை தடுக்கும். 09. மற்றவர்கள் புறம்பேசும் வார்த்தைகளை காதால் கேட்பதை நிறுத்த வேண்டும். உங்களிடம் புறம்பேசுபவர்களை தள்ளி வையுங்கள். ஏனெனில் உங்களிடம் ஒருவரை பற்றி குறை கூறுபவர்கள் மற்றொருவரிடமும் உங்களை பற்றி குறை கூறுவார்கள். மற்றவர்களை பற்றி அதிகமாக குறை சொல்வது உங்களிடம் *நெகட்டிவான எனர்ஜியையே* அதிகமாக *ஈர்க்கும்* 10. மற்றவர்களிடம் பேசும் பொழுது *பிரச்சினைகள், வேதனைகள், கவலைகள்,குறைகள்* பற்றி பேசுவதை அடியோடு நிறுத்த வேண்டும். 11. எதையும் எந்த *பொருளையும் அல்லது உதவிகளை* இலவசமாக வாங்குவதற்கு எதிர் பார்க்கக்கூடாது. 12. காலையில் எழுந்ததும் *NEGATIVE வான வார்த்தைகளை* பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். *பாஸிட்டிவான எண்ணங்களையே* அதிகமாக பேசுங்கள்! 🧠 POSITIVE விஷயங்கள் மற்றும் ENERGY யை POSITIVE வாக மாற்றம் செய்ய. 01.காலையில் எழுந்ததும். ஒரு CUP வெந்நீரில் , ஒரு கரண்டி தேன் ,ஒரு எழும்மிச்சை பழம் பிழிந்து குடிக்க வேண்டும். 02. *நன்றியுணர்வு* செய்யுங்கள். உங்களுக்கு கிடைத்த அத்தனை நல்ல விஷயங்களுக்கும் தினமும் *நன்றி* கூறுங்கள். *நன்றி* சொல்லி பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் *மிகப்பெரிய மாற்றங்களையும் வளர்ச்சியையும்* கண்கூடாக பார்க்கலாம். 03. *YOGA,GYM EXERCISE, WALKING.* 04. *SELF AFFIRMATION.* 05. அழகாக *DRESS UP.* 06. *நல்ல வாசனை திரவியங்கள்* USE பன்னுங்கள் . 07. வீட்டில் *சமைத்த உணவுகளை* மட்டுமே அதிகமாக உண்ணுங்கள். பழங்கள் காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். 08. எப்பொழுதும் *POSITIVE* வாக பேசுங்கள் . *POSITIVE* வான *விஷயங்களை* மட்டுமே செய்யுங்கள். 09. நிறைய *SELF AWARENESS* புத்தகங்கள வாசிக்க வேண்டும். *நிறைய Motivational quotes & videos* பாருங்கள் இவைகள் உங்களை *வெற்றியை* நோக்கி மிக எளிமையாக அழைத்துச் செல்லும். 10. உங்களால் முடிந்த *சின்ன சின்ன உதவிகளை* செய்யுங்கள். பசியால் வாடுபவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவளியுங்கள்! இது இறைவன் செய்யும் செயலாகும். *பணம், பொருட்கள், உணவுகள்* இருந்தாலும் பரவாயில்லை. உதவி செய்யுங்கள். உங்களால் உதவிகள் செய்ய இயலவில்லை என்றாலும் கூடம் உங்கள் மனதால் உடலால் மற்றவர்களுக்கு *தீங்கை ஒருபோதும்* நினைக்காதீர்கள். இது திரும்ப உங்களுக்கே அதிகமாக கிடைக்கும். மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே கூடம் அதுவே *உயர்ந்த தர்மமே.* 11. நீங்கள் எந்த *மதமாக* இருந்தாலும். அருகில் இருக்கும் *( கோவில்கள் பள்ளிவாசல், CHURCH ,)* மத ஸ்தலங்களுக்கு ஒவ்வொரு நாளும் சென்று வழிபட்டு வாருங்கள். இது *உங்களின் மன அமைதிக்கும் சமுதாய அமைதிக்கும்* நிச்சயம் வழிவகுக்கும். 12.ஒவ்வொறு நாளும் இரவு தூங்கும் முன்பு உங்களுக்கு உதவிகள் செய்தவர்களுக்கு நன்றிகள் சொல்லுங்கள். இனிமேல். உங்களுக்கு உதவிகள் செய்ய இருப்பவர்களுக்கு நன்றிகள் சொல்லுங்கள். உங்களால் துன்பம் பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு சூழ்நிலையின் காரணமாக *துன்பம்* கொடுத்திருந்தால் அவர்களை நீங்கள் *மனதார மன்னியுங்கள்!* துன்பம் செய்தவரை *மன்னியுங்கள் மறந்து விடுங்கள்!* உங்களுக்கு உதவி செய்தவரை *ஒருநாளும் மறக்காதீர்கள்!* நன்றி உணர்வோடு இருக்கும். அது *சிறிய குண்டூசி உதவியோ அல்லது மலையளவு* உதவியோ மறக்காதீர்கள்!.... நன்றி கூறுங்கள்‌. இது உங்கள் *வாழ்க்கையை வளமாக்கும்.* பிரபஞ்சம் மேலும் உங்களுக்கு நல்லதையே செய்யும். *நன்றி இருக்கும் இடத்தில்* எப்போதும் *நன்மைகள்* குடிகொள்ளும். நீங்கள் *ஒவ்வொரு நாளும்* செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் தான் . பின்நாளில் *உங்களை உயரே மேல் நோக்கி* உயர்த்தும். *நமது 'எண்ணங்கள்' தான் நமது வாழ்க்கையை உருவாக்கிறது .நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை வசந்தமாக்குகிறது! மனமானது செம்மையானால் வாழ்க்கையானதும் செம்மையாகும்* *நாம் பேசும் வார்த்தைகள் தான் நமது வாழ்க்கையை உருவாக்கிறது.* இது *ஈர்ப்பு விதியின் சாராம்சம்* இதுவே வாழ வந்தோம்! வாழ்வோம்! வாழ வைப்போம்!.....🙏

தாய் தந்தை முதற் தெய்வம்: *🪷இந்த உலகில் அம்மா, அப்பா ஆசியை முதலில் பெறுபவர்கள் யாரோ அவர்கள் குருவின் பரிபூரண ஆசியையும் இறைவனின் பரிபூரண ஆசியையும் எவ்வித தடைகளுமின்றி மிக எளிதாக பரிபூரணமாக பெறுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!* *👉 அம்மா அப்பாவுக்கு செய்யும் சேவை!* 🙇🏻‍♂️ *மகேசனுக்கு/இறைவனுக்கு/இயற்கைக்கு செய்யும் சேவை ஆகும்!*🙇🏻‍♂️ *தன் உதிரம் கொண்டு கருவறையிலிருந்து நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்து தன்னை முதலில் பார்த்து சந்தோஷப்படும் 'தாய் தந்தையரை' முதற் கடவுளாக போற்றுவோம்! என்றும் மன மகிழ்ச்சியோடு வாழ்வோம்.*🙇🏻‍♂️ (கடவுள் நமக்கு குழந்தை வரத்தை கொடுப்பதே தன்னுடைய தாய் தந்தையரின் அருமையை நன்கு உணர்வதற்கே! என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்) *மாதா,பிதா,குரு, தெய்வத்தின் ஆசியோடு இவ்வுலகில் எப்போதும் அன்பும் மகிழ்ச்சியும் பரவியிருக்கட்டும்!* *நல்லதே நடக்கும்!* *வாழ்க வளமுடன்!* *இனிய காலை வணக்கம்💚💐*

துணிவே வெற்றி: ✨✨✨✨✨✨✨✨✨✨✨ *தயங்கி தயங்கி நிற்பவர்கள் ஒரு போதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை!* ✨✨✨✨✨✨✨✨✨✨✨ *'தயங்கியவர்கள்' ஒரு போதும் வெற்றியடைவதே இல்லை!* *'துணிந்தவர்கள்' ஒரு போதும் தோற்றதே இல்லை!* *'தயக்கம்' உங்களின் வெற்றியை தள்ளிப்போடும்* *'துணிவு' உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்* *இனிய உற்சாகமான காலை வணக்கம்*💐💐💐💐💐

மகள்; *🪷எங்கள் குலதெய்வமான பெருமாளின் ஆசியால் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே!...* *🪷எங்கள் முன்னோர்களின் பரிபூரண ஆசியால் எங்களுக்கு கிடைத்த பவித்திரமே!...* *🪷எங்கள் தந்தையின் ஆசியை பெற்று எங்களுக்கு கிடைத்த தவப்புதல்வியே!*..... *🪷திருச்செந்தூர் முருகனின் ஆசியால் அவதரித்த சண்முகநாதரின் திருவுருவமே!....* *🪷பழனி வேல்முருகனின் ஆசியால் கிடைத்த பஞ்சாமிர்தமே!...* *🪷திருப்பதி திருச்சானூர் அலர்மேல் மங்கை/பத்மாவதி ஆசியால் உதித்த ஆயிரம் இதழ் கொண்ட தாமரையே!* *🪷திருப்பதி கோவிந்தராஜ சுவாமியின் ஆசியால் உதித்த எங்களின் 'கோமகளே/இளவரசியே!...* *🪷 திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதியின் ஆசியால் எங்களுக்கு கிடைத்த லட்டுப்பிரசாதமே!🍘🍘🍘...* *🪷அழகின் மறுவுருவமே!* *🪷எங்கள் வாழ்வில் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தேவதையே!...* *🪷எங்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காகிய மூத்த தீபச் சுடரே!....* *🪷தேவாதி தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்களின் ஆசியால் இப்புவியினில் உதித்தே தேவாமிர்தமே!...* *🪷இயற்கையின் பரிபூரண ஆசிகளை பெற்று எங்கள் வாழ்வில் உதித்த வைரமே!....* *🪷அகிலத்தில் அன்பை பரவச் செய்யும் அன்பின் திருவுருவமே!* *🪷அன்பு அமைதி பொறுமையின் மறுவுருவமாய் திகழப்போகும் எங்கள் சீதையே!...* *🪷இப்புவியில் பெண்மணிகளுகெல்லாம் முன் உதாரணமாக வாழ்ந்து காட்ட பிறந்த மனிதகுல பெண் இரத்தினமே!..* *🪷 எத்தடைகளையும் தகர்த்தெறிந்து இப்பூவுலகில் தைரியமாக முன்னேறிச் செல்லும் எங்கள் தங்கமே!...* *🪷தர்மத்தின்/அறத்தின் மறுவுருவே!..* *🪷 என்றும் இயற்கையை நேசிக்கும் இயற்கையை பாதுகாக்கும் இயற்கையை ரசிக்கும் இயற்கை ப்ரியமுடையவளே!.... இயற்கை எங்களுக்கு வழங்கிய இயற்கையின் கொடையே!...* *🪷பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஆசிகளை முழுமையாக பெற்ற உதித்த 'முழுமதி'யே!....* *🪷பிரம்ம முகூர்த்தத்தில் எங்கள் வாழ்க்கையில் உதித்த பிரம்மாஸ்திரமே!...* *🪷 உலகம் நன்மையடைய நாராயணனின் ஆசிகளை பெற்று கிருஷ்ணபட்சத்தில் உதித்த நாராயண அஸ்திரமே!...* *🪷சிவனின் ஆசியால் உதித்த பாசுபத அஸ்திரமே!....* *🪷சிவபத்தினி 'மலைமகள்(துர்கை)' ஆசியால் உதித்த எங்களின் வீரமே! என்றும் வீரத்தோடு வாழ்வாய்...* *🪷 பாற்கடலில் தோன்றிய விஷ்ணு பத்தினி 'அலைமகள் (இலட்சுமி)' ஆசியால் உதித்த எங்களின் செல்வமே! என்றும் செல்வாக்கோடு செல்வச் செழிப்புடன் வாழ்வாய்...* *🪷நான்முகன் பத்தினி 'நாமகள்/கலைமகள்/பாரதி/வாணி/வெண்தாமரையாள்/சாவித்திரி/வாக்குதேவி/இசைமடந்தை/சரஸ்வதி' ஆசியால் உதித்த எங்களின் 'ஞானமே' என்றும் அனைத்து ஆயகலைகளோடு வாழ்வாய்!...* *🪷நவகிரகங்களின் முழு ஆசிகளை பெற்ற நவரத்தினமே!...* *🪷அஷ்டதிக் பாலகர்களின் பரிபூர்ண ஆசியை பெற்று அவதரித்த அஷ்டலட்சுமியே!...* *🪷மரம்,செடி,கொடிகள், ஆறுகள் மற்றும் சமுத்திரம்/கடல் போன்ற இயற்கையின் ஆசிகளை பெற்று உதித்த எங்களின் 'இனியவளே'!....* *🪷மனிதருள் மாணிக்கமாய் விளங்க போகும் எங்களின் பெண் இரத்தினமே!....* *🪷உலகமறிய பல சாதனைகளை படைத்து சூரிய ஒளியாய் மிளிர வாழ்த்துக்கள் எங்கள் அன்பு புதல்வியே!....* *🪷'சுக்கிரனை' அதிபதியாக கொண்டு 'பூராடம்' நட்சத்திரத்தில் பிறந்த நீ இளம் வயதிலேயே சுக்கிர தசையால் பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்து பேரும் புகழோடு வாழ்வாய்!* *🪷உன்னால் உற்றார் உறவினர் மற்றும் உலகமே நன்மை அடையட்டும்* *🪷அன்பை அனைவருக்கும் வாரி வழங்கி அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடிக்கும் 'அன்பின் திருவுருவமே'!...* *🪷உனது இப்பிறவியின் நோக்கம் இனிதே நடைப்பெறட்டும். உன்பிறப்பால் இவ்வுலகம் நன்மையடையட்டும்* *வாழ்க! வளமுடன்!🙏* *வளர்க! பேரும் புகழுடன்!*🙏 🤗🤗🤗