Posts
Showing posts from November, 2022
*மனிதன்:-* பிரபஞ்சமே நீ ஏன் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்க மறுக்கிறாய்? *பிரபஞ்சம்:-* நீ எத்தனை பேருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாய்? *மனிதன்:-* மௌனமாக இருக்கின்றான் *பிரபஞ்சம்:-* உன்னிடம் *அன்பு கருணை ஆனந்தம் அமைதி* போன்ற விதைகளும் உன்னிடம் இருக்கிறது *கோபம் பொறாமை எரிச்சல் சுயநலம்* போன்ற விதைகளும் இருக்கிறது நீ உன்னை சுற்றி உள்ள *உயிர்கள்* என்ற நிலத்தில் எதை அதிகமாக நீ விதைத்தாயோ அதையே நீ மீண்டும் அறுவடை செய்கின்றாய். நீ உன்னை சுற்றி உள்ள *மனிதர்கள்* காயப்படும் போது *உயிர்கள்* காயப்படும் போது துன்பப்படும் போது அவர்கள் *மகிழ்ச்சியாக ஆனந்தமாக அமைதியாக* இருப்பதற்கு நீ எதையும் செய்யவில்லை என்றால் நீ காயப்படும் போதும் துன்பப்படும்போதும் துயரப் படும் போதும் நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கு நான் எதுவும் செய்ய முடியாது ஒருவேளை உன்னை சுற்றி உள்ள *உயிர்கள் துன்பத்தில்* இருக்கும் பொழுது *காயப்படும்* போது அவர்கள் துன்பம் விலக நீ ஏதேனும் *அன்பு, கருணை* போன்ற குணங்களை வெளிப்படுத்தி அவர்கள் *மகிழ்ச்சியாக* இருப்பதற்கு நீ ஏதேனும் செய்திருந்தால் நானும் அதையே உனக்கு செய்கின்றேன். *பிரபஞ்சம்:-* மீண்டும் சொல்கிறேன் *நீ எதை விதைத்திருந்தாயோ அதையே அறுவடை செய்வாய்.* *மனிதன்:-* இதுவரை நான் சுயநலமாக இருந்து விட்டேன் நான் என்ன செய்வது? *பிரபஞ்சம்:-* இப்பொழுதும் உனக்கு வாய்ப்பு இருக்கிறது இன்று முதல் நீ எதை விதைக்கிறாயோ அதை நாளை அறுவடை செய்வாய். *மனிதன்:-* எனக்குள் *அன்பும் கருணை* வெளிப்படுவதற்கு நீ உதவி செய். *பிரபஞ்சம்:-* ஏற்கனவே அதற்கான சூழ்நிலைகள் நீ வாழும் பூமியிலேயே இருக்கிறது அது உன்னை சுற்றியுள்ள உயிர்களின் வலிகளாக இருக்கிறது அந்த வலிகளை கண்டு இரக்கம் கொள் கருணை மலரும் *உயிர்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆனந்தமாக வாழ்வதற்கு நீ ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்* இதுவே *உன் மகிழ்ச்சிக்கும் உன் ஆனந்தத்திற்கும் உன் முத்திக்கும் வாய்ப்பாக இருக்கும் இதுவே நான் உனக்கு அருளும் உபதேசம்* *மனிதன்:-* நான் *மகிழ்ச்சிக்கு* வழி கேட்டேன் என் *முத்திக்கே* வழி கொடுத்தாய் பிரபஞ்சமே சிரம் தாழ்ந்த நன்றிகள். *பிரபஞ்சம்:-* உனக்கான விதைகள் உன்னிடத்தில் நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் உனக்கு எது வேண்டுமென்று நினைக்கிறாயோ அதையே மற்றவர்களுக்கு கொடு வாழ்க வளமுடன். *மனிதன்:-* நன்றி
- Get link
- X
- Other Apps
கதை நேரம் ~ ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான் இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான் அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது. நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது சோகமே உருவாகிவிட்டான்,,, ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள். புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான் அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது. ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?" விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும். இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் "வேணாஞ்சாமி வேணாம், நீக ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக. என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள். மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது. தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள் மனைவி வந்தாள். கண்ணீர் துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்; "இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக, விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்" தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது. கரி வியாபாரம் செய்து மிகப்பெரிய செல்வந்தன் ஆனான்.வாழ்க்கை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது கருத்து 1.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 2.தோல்வியை கண்டு மனம் தளரக் கூடாது. 3.கடவுள் நமக்கு ஒரு சோதனையை கொடுக்கிறார் எனில் தற்போது இருக்கும் தன் நிலையை விட உயர்ந்த நிலையை அடைவதற்காகவே என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 4.சோதனைகள் யாருக்கு அதிகம் வருகிறதோ அவரே சாதனைகள் பல படைக்க போகிறவர் ஆகிறார். 5.ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு மனம் தளராமல் பயணிப்பதே 'வெற்றி' ஆகும்.தோல்வியிலிருந்து நிறைய வெற்றிக்கான அனுபவங்கள் கிடைக்கிறது.அந்த அனுபவமே நம்மை வெற்றி பாதைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.
- Get link
- X
- Other Apps
மனிதனின் உண்மையான ஊனம் எது?: மனம் தான்_*உடலில் ஊனம் (குறைபாடு) உள்ளவர்கள் ஊனத்தையே உதறி தள்ளிவிட்டு வாழ்க்கையில் முயற்சி செய்து முன்னேறுகிறார்கள்; வெற்றி அடைகிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.உடலில் உள்ள உள் உறுப்புகளோ வெளி உறுப்புகளோ ஊனம் இல்லை.மனிதனின் மனமே ஊனம் ஆகிறதுமனதை ஊனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*_"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி"- குறள்_* *[ குறள்எண்:618 ]**[ அதிகாரம்: ஆள்வினையுடைமை ]*குறள் விளக்கம்: உடல் உறுப்புகள் செயலற்று இருப்பது குற்றம் ஆகாது.அறிய வேண்டியவற்றை அறிந்து *முயற்சி செய்யாமல் தயங்கி தயங்கி இருப்பதே குற்றம்* ஆகும்.(முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம் ஆகும்)பாடல் வரிகள்: ஊனம் ஊனம்...இங்கே ஊனம் யாருங்கோ....? உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ... உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே... உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே.......👉உடல் ஊனத்தை விட 'மன ஊனம்' கொடியதிலும் கொடியது.மனம் ஊனமாக இருந்தால் செயற்கை மனம் பொறுத்த முடியாது.👉மனிதனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அவன் மனமே தான் காரணம். மனிதன் முன்னேறாமல் இருப்பதற்கும் காரணமும் மனமே.👉அவரவர் மனதிலே உள்ள ஊனத்தை களைந்தாலே போதும் மனிதன் வெற்றி பெற்று விடுவான்.👉"ஊனம் உடலுக்கில்லை மனதிற்குதான்"👉தன் மேல் நம்பிக்கை இல்லாதவர் யாரோ அவரே ஊனமுடையவர்👉எல்லா இழப்பும் இழப்பல்ல!நம் மனதிலே முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்கு பேரிழப்பு 👉 மனம் ஊனமானால் மார்க்கம்(வழி) இல்லை👉 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு👉ஊன மனமே உண்மையான ஊனம்👉 மனிதனிடம் உள்ள ஒரே ஊனம் மன ஊனம் மட்டுமே👉மன ஊனத்துக்கு இங்கே மருந்தோ மாத்திரைகளோ அல்லது வைத்தியமோ கிடையாது.👉 ஒலியின் வேகத்தை விட அதிக வேகம் உள்ளது ஒளி,ஒளியை விட வேட வேகமானது மனித மனம்.நம் மனம் சரியாக இருந்தால் எப்படிப்பட்ட சாதனைகளையும் படைக்க முடியும்.👉மன ஊனம் எனும் இருள் நீக்கினால், இன்பம் எனும் வெளிச்சம் வாழ்வில் வரும்.உடல் ஊனம் என்பது ஒரு ஊனமேயில்லை.👉 எல்லாத்துக்கும் காரணம் மனசுதான்யா. வாழ்வானாலும் சரி,தாழ்வானாலும் சரி,உடல் ஊனமானாலும் சரி, மனம் இருந்தால் எல்லாவற்றிற்கும் மார்க்கம் உண்டு.👉மனதின் ஊனமே வெளியே கண்டுப்பிடிக்க முடியாத ஊனம்.இந்த ஊனம் இருந்தால் மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதே இல்லை.👉 தங்கத்திலே குறை இருந்தாலும் அதன் தரத்திலே குறைவதில்லை. உடலிலே குறை இருந்தாலும் மனதிலே குறை இல்லாமல் இருந்தால் மனிதன் சாதனை படைக்கிறான்.நில்லு... நில்லு... சொந்த காலில் நீயும் நில்லு!தள்ளு... தள்ளு... தலைவிதியைக் கையால் தள்ளு!!எத்தனை பேர் வந்தாங்க... எத்தனையோ பேர் போனாங்க..... சாதித்தவர்கள் மட்டுமே இங்கு நிலையாக நின்னாங்க....மனதை செம்மையாக்கி,வாழ்க்கையை இனிக்கும் கரும்பாக்க வாழ்த்துக்கள் நண்பர்களே.
- Get link
- X
- Other Apps