Posts
Showing posts from October, 2022
*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* *(முக்கியமான பதிவு. தவறாமல் படிக்கவும்)* *ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..* *இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..* *தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..* *அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..* *ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.* *ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..* *மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..* **இங்கு வெள்ளையன்* *வரும்வரை* *எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.* *வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...* *வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..* *தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...* *புகையிலையும் அப்படி வந்ததே.* *இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.* *உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.* *வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,* *வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.* *கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.* *கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.* *தேங்காய் இருந்த* *இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல* **மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.* *நோய்கள் பெருகின..* *ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...* *ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்?* *கேரட் , பீட்ரூட்* *இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..* *ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின..* *அத்தோடு விட்டானா?* *அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.* *விளைவு..?* *தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின ...* *சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.* *சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...* *ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..* *நோய் பெருகிற்று....* *அதாவது சூடான* *பூமியில் சூடு* *கொடுக்கும்* *உணவினை உண்டு நம்மை* *நாமே கெடுத்தோம்...* *வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?* **குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.* *உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..* **இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..* *எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.* *இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...* *பரிதாபம்.* *காரணம்,* *அவற்றுக்கு* *உண்மையான* *பொருளும்* *மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....* *அவை என்ன செய்யும்?* *எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...* *ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன...* *நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும்* *நிலையென்றால்* *தனியார்* *நிலையங்கள் எப்படி இருக்கும்?* *எதையோ தின்று* *எதையோ குடித்து,* *எதையோ புகைத்து,* *எதையோ மென்று* *இல்லா நோய்கள்* *எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்* *எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..* *மஆப்ரிக்காவிலும்* *அரேபியாவிலும் காப்பி இருந்தது..* *தமிழனுக்கு, வாழை இலையில் வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.* *பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!* *புரிகிறதா...?* *இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..* *பாலில் காப்பி, டீ ,* *சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய* *வியாபார தந்திரம்,* *இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.* *காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல..* *அவை இன்றியும் வாழமுடியும்...* *அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.* *வழிபோக்கர்கள் இலவசமாக உணவு அருந்தி தங்கி செல்ல கூடிய சத்திரங்களை அழித்து ஹோட்டல்களையும் அதில் தந்திரமாக புரோட்டாவையும் பேக்கரியில் மைதா மட்டுமே மூலப்பொருளாக கொண்ட உணவுகளை உண்டாக்கி அதை இலவசமாக ஆஸ்பத்திரிகளில் கொடுத்து அந்த உணவுகளுக்கு நம்மை அடிமை ஆக்கினான். இப்படி இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.* *விஷம் அவை..* *இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.* *இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது* *ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம்,* *ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை* *ஆலயங்களிலும் இந்த நாட்டின்* *பாரம்பரியமான பண்டிகை மற்றும்* *சடங்குகளிலும்* *காணலாம்..* *தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..* *துளசி போல் அருமருந்தில்லை..* *அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.* *தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..* *தேர்களில்* *தெய்வங்களுக்கு* *வீசபடும் மிளகும்* *உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.* *உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...* *அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம்,* *ஆடும் சேவலும் எப்படி* *இருந்தால் அங்கு* *பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட* *வேண்டும் என்ற விதிகள் உண்டு.* *அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.* *சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..* *அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள்* *ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்* *நோய்க்கு இடம் கொடா...* *மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..* *இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..* *அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..* *கருத்தரிப்பு சிக்கல்* *சிசேரியன் என மறுபுறம்.* *மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..* *பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..* *அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...* *மாறாக அதெல்லாம் பழமை என* *ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..* *அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது* *இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..* *அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...* *நாம்* *பாரம்பரியத்தை* *மீட்டெடுத்தால்* *தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...* என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..* *ஆம்.* *மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக கடற்கரை* *கடற்கரையாக* *நடந்தாலும்* *ஆகபோவது ஒன்றுமில்லை...* *நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..* *அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...* 💐🙏💐
- Get link
- X
- Other Apps
சுய பிரகடனம் (Self affirmation): தினமும் நாம் சொல்லக்கூடிய சுய பிரகடனம்(Self affirmation) நாம் வெற்றி பெற தினமும் சொல்லக்கூடிய உறுதிமொழிகள்: பிரபஞ்ச ஆற்றல் விதிக்கு நன்றி 1. நான் செல்வ செழிப்புடன் வாழ்கிறேன். 2. பணம் பல வழிகளில் என்னிடம் வருகிறது. 3. நான் பணத்தை காந்தம் போல இழக்கிறேன். 4. நான் பணத்தை நேசிக்கின்றேன். 5. பணமும் என்னை நேசிக்கின்றது 6. நான் பணத்தின் மதிப்பை அறிந்திருக்கிறேன். 7. என் எண்ணமும் பணத்தை ஈர்க்கின்றது. 8. நாளுக்கு நாள் என் பணம் வரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. 9. எனக்கு அதிக லாபம் வந்து கொண்டே இருக்கிறது. 10. என் வாழ்வில் பணம் நிறைந்து இருக்கிறது. 11. நான் பணம் சம்பாதிப்பதில் திறமைசாலி. 12. அனைத்து செல்வங்களும் ஏன்னை எளிதில் வந்தடைகிறது. 13. எனது பொருளாதாரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 14. நான் தொட்டதெல்லாம் பொன்னா கிறது. 15. என் செல்வம் என் வாழ்வில் உயர்த்துகிறது. 16. நான் பணத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 17. நான் பணம் மழையில் நினைக்கின்றேன். 18. என் பணத்தினால் என் தேவைகள் யாவும் நிறைவேறி வருகிறது. 19. என் அதிக பணத்தினால் நான் பிறருக்கு உதவி செய்கிறேன். 20. பணத்தை நான் அதிக அளவில் சம்பாதிக்கிறேன். 21. நாளுக்கு நாள் என் வங்கி கணக்கில் பணம் பெருகிக் கொண்டே வருகிறது. 22.நான் பணத்தை வசீகரிக்கின்றன். 23. பணமும் என்னை ஈர்க்கின்றது. 24. பிரபஞ்சம் எனக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுக்கின்றது.
- Get link
- X
- Other Apps
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன் உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.சிறிது கால்த்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்த்து. ஆனால் அவரின் மனஉளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது. உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி. ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும். மாவீரனுக்கும் சரி,சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது. வாய்ப்புகள் கண்முன்னே இருந்தாலும் அதை கையில் எடுப்பதற்கான சூழலையே மறக்க செய்து விடுகிறது. நம் வாழ்க்கையில் உள்ள பண பிரச்சினைகள்,குடும்ப பிரச்சினைகள், குடும்ப சூழல்கள், வேலைக்கு போற இடத்தில் உள்ள மன அழுத்தங்கள் இது போன்ற சில காரணங்களால் தான் நம் கண்முன்னே இருக்கும் அற்புதமான மிகப்பெரிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாத சூழலை நம்மிடையே ஏற்படுத்தி வருங்காலத்தில் நம்முடைய கனவுகளையும் இலட்சியங்களையும் சிதைக்க கூடிய காரணிகளாக அமைந்து விடுகிறது. மனம் அமைதியாக இருந்தால் தான் பிரச்சனையை எதிர்நோக்கும் சிந்தனை சிறப்பாக செயல்படும். வாய்ப்புகள் கண்முன்னே இருப்பதும் தெரிய வரும். 🌿🙏🌿
- Get link
- X
- Other Apps
காலம் தாழ்த்தாமல் உடனடி முயற்சி: நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை பொறுத்து,நாம் எடுக்கும் முடிவை பொறுத்து தான் நாம் வெற்றியாளராவதும் தோல்வியாளராவதும் முடிவு செய்யப்படுகிறது நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது மற்றவர்களோ அல்லது பக்கத்தில் வீட்டு காரர்களோ அல்ல நண்பர்களே..... நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவே நம்முடைய வருங்கால வெற்றியை தீர்மானிக்கவல்லது குறள்: 620 அதிகாரம்: ஆள்வினை உடைமை _"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர்"_ - திருக்குறள் [ஊழை-தலைவிதி உலைவின்றி- ஊக்க குறைவின்றி, தாழாது- சிறிதும் தாமாதிக்காமல் உஞற்று- முயற்சி ] குறள் விளக்கம்: காலம் தாழ்த்தாமல் உடனடி முடிவும் + முயற்சியுமே விதியையே வெல்லக் கூடியதாக அமைகிறது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (நம்மிடம் முயற்சி என்ற ஒன்று இருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக முயற்சியை மேற்கொண்டோமானால் அந்த விதியையே புறமுதுகிட்டு ஓட வைக்க முடியும் )
- Get link
- X
- Other Apps
https://youtu.be/5XYTKTXKjto *🩸🩸🩸மாரடைப்பு (heart attack) வரும் போது என்ன முதலுதவி செய்ய வேண்டும்?* *இந்த வீடியோவை அனைவருமே தவறாமல் பாருங்கள். யாராவது ஒருவரின் தாயோ அல்லது தந்தையோ அல்லது ஒருவரின் உயிரை காப்பாற்ற இது உதவி புரியலாம்* *ஒவ்வொருவரும் அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.* *உங்கள் பிரியமானவர்களை பிரியாமல் இருக்க இது நிச்சயம் துணை புரியும்🙏* 🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑
- Get link
- X
- Other Apps
பிறர் பேசுவதை தவறாக புரிந்து கொள்ளாமலும், மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி பேசுவதும் ஒரு கலையே.
- Get link
- X
- Other Apps
தாய் தந்தை: ஒவ்வொருவரும் *தாய் தந்தையரை* அவர்கள் இருக்கும் வரை முதல் கடவுள்களாக நினைத்து வணங்குங்கள்.அவர்களை நன்றாக *கவனித்து* கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களே உங்களிடம் அன்றாடம் கண் முன் இருந்து அடிக்கடி பேசும் முதல் தெய்வங்கள். (மாதா-அம்மா,பிதா-அப்பா,குரு, தெய்வம்). அவர்களின் மனதை புண்படும்படியான வார்த்தைகளை பேசாதீர்கள்.அவர்களின் சந்தோசமே உங்களின் சந்தோசமாக பாருங்கள்.அவர்களுக்கு தேவையானது எது என்பதை அறிந்து செய்யுங்கள்.அவர்களின் மன மகிழ்ச்சியே உங்களுக்கு பரிபூரண அருளை வழங்க கூடியது. *அப்பா அம்மாவின் ஆசிர்வாதம்* இல்லாமல், அவர்களின் சந்தோசத்தை மகிழ்ச்சியை பெறாமல் நீங்கள் எந்த *கோயில் குளம்* சென்று அங்கே கடவுளை வணங்கினாலும் அங்கு *கடவுளின் அருள்* உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்காது. தாய் தந்தையரை சந்தோசமாக வைத்துக் கொண்டு அவர்களின் ஆசியை பெறுபவர்களிக்கே *திருவருள்* (கடவுளின் )கிடைக்கின்றது. தாய் தந்தையர்கள் வாழும் போது *அவர்களை கவனிக்காமல்* அவர்களுக்கு *உணவு உடை உறைவிடம்* இல்லாமல் தனியே தவிக்கவிடுவது அவர்களை மனம் வருத்தும் படி செய்யும் பிள்ளைகள் இருந்தும் *இறந்ததற்கு சமமான* ஒன்றே ஆதலால் *தாய் தந்தையர்கள்* வாழும் போது அவர்களை *மகிழ்ச்சியாக வைத்து* கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பது உங்களின் *அன்பான வார்த்தைகளையே.* இழந்தால் திரும்ப நமக்கு கிடைக்காதது நேரம் மட்டும் அல்ல. *தாய் தந்தையர்கள்* உங்களோடு அருகில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கும் *அந்த தருணம்* கூடம் தான்..... இதை *அவர்கள் இருக்கும்* போது சிலர் உணர மாட்டார்கள்.அவர்கள் *நம்மிடம் இல்லாத* போதே உணர்வார்கள். *உங்களின் பிறந்தநாள், உங்களின் திருமண நாள்* போன்ற விஷேச நாட்களில் அவர்களின் *கால்களில் பணிந்து* அவர்களின் ஆசியை பெற முயற்சியுங்கள். இது கோயில்களிலே கொடிமரத்தின் அருகிலே கடவுளை விழுந்து வணங்கும் பலன்களை காட்டிலும் *பல மடங்கு பலன்களை* உங்களுக்கு பெற்று கொடுக்கும்.அந்த பொன்னான தருணம் அவர்கள் வாழும் போதே அவர்கள் நம்மிடம் இருக்கும் போதே பெற்று கொள்ள ஒவ்வொருவரும் முயற்சியுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மை விட்டு *தேவலோகம்* சென்று விட்டால் மறுபடியும் அந்த பொன்னான வாய்ப்பும் நமக்கு திரும்ப சத்தியமாக கிடைக்காது. இழந்தால் திரும்பவும் *கிடைக்காது இதுவும்😓*😪 ஒன்றாகும். வாழும் போதே *தாய் தந்தையோடு* மிகழ்ச்சியாக இருக்கும் தருணமே இவ்வுலகில் ஒருவருக்கு கிடைத்தர்கரிய அரிய பேறாகும். அதை அவர்களுடன் வாழும் போதே அனுபவித்து விடுங்கள். மறுபடியும் வேண்டினாலும் கிடைக்காது. *_நம் தாய் தந்தை நம்மை முதல் முதல்முதலில் பெற்றெடுக்கும் போது அவர்கள் அந்த நொடியில் பெறும் சந்தோசத்தை....... அவர்களோடு நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்_* *பெற்றோருடன் மகிழ்ச்சியாக* இருக்கும் அந்த *இனிமையான தருணங்களே* இவ்வுலகில் ஒருவர் *பெறும் பேறுகளில் தலைசிறந்தாகும்.*🙏.....
- Get link
- X
- Other Apps
தாய் தந்தையே முதல் கடவுள்:ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, " ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!! "மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!! அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து , "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!! ஆனால் , "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.கவலைப்படாதே ....!!இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று," கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!மறுபடியும் அவன் வரவேயில்லை....!! மரம் அவனுக்காக ஏங்கியது....!! பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!! அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!! அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். "வா என்னிடம் வந்து விளையாடு"...!! "இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!அதற்கு அவன்_ இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,ஆனால் , "நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை"....!! "வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!மரம் உடனே சொன்னது , பரவாயில்லை .... "உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!அதற்கு பதில், " என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!! "இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!முடிந்த வரை, " வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!! அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!! அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!மரம் அவனை பார்த்து, " ஆனந்த கூத்தாடியது"......!!!அவன் எப்போதும் போல் , 'சோகமாக இருந்தான்'.....!!"ஏன் இப்படி இருக்கிறாய்", என்று மரம் கேட்டது.....!! "என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"...., "படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!"அதனால் வருமானம் இல்லை" "நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!மரம் துடித்து போனது,.....!!" நான் இருக்கிறேன்".....!! "என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!அவன் அடி மரத்தை வெட்டும் போது...., மறக்காதே....!!வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் ......,"எப்போதாவது என்னை பார்க்க வா".. என்றது....!!ஆனால் அவன் வரவேயில்லை.....!! மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!அப்போது அவன் வந்தான்.....!!! 'தலையெல்லாம் நரைத்து' , 'கூன் விழுந்து' , 'மிகவும் வயதான தோற்றத்துடன்'... , அவன் இருந்தான்.....!!"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!"கிளைகள் இல்லை"........!!!"அடி மரமும் இல்லை".........!! உனக்கு கொடுக்க, "என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!அவன் சொன்னான் ,நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' , அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!! வீடு கட்டவும் ,படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை....!! "எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!அப்படியா....!!! இதோ...., " தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!! "அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!இந்த சுகத்துக்கு தான்...... "அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!! "அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!"இது மரத்தின் கதையல்ல"....!! " நம் பெற்றோர்களின் கதை"....!! இந்த சிறுவனை போல் ,"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!! வளர்ந்து பெரியவனானதும்..., தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ,"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!"நம்மிடம் இருப்பவை எல்லாம்", " அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"🌳 "நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது"🌳 "நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர"🌳 "அவர்கள் விரும்புவதும் அதைதான்" தாய் தந்தையர்கள் இருக்கும் போதே சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து விடுங்கள்.பெற்றோரின் அருமை அவர்களை இழந்தபின்னே பலருக்கு புரிய வரும். அவர்கள் தம்முடன் இருக்கும் காலமே நமக்கு பொன்னான காலம் ஆகும்.🌳
- Get link
- X
- Other Apps