Posts
Showing posts from November, 2020
கம்பு மருத்துவ பயன்கள்:⚛அதிக நன்மைகள் தரும் கம்பு⚛ அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். இந்த இரண்டைப் போலவே பல சத்துகள் நிறைந்த தானியமாக ‘கம்பு’ இருக்கின்றது. இந்தக் கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பலவகையில் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பின் மருத்துவ நன்மைகள்: கம்பு ஆங்கிலத்தில் ‘Pearl Millet’ என அழைக்கப்படுகிறது. இது ஒரு புன்செய் நிலப்பயிராகும். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தைப் பிடிக்கிறது. கம்பின் வரலாறு: பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்பு ஆசிய நாடுகள், அமெரிக்க நாடுகள் எனப் பரவி இன்று சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாக விளைவிக்கபடுகிறது.. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும், மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தைக் கம்பு பிடித்திருக்கிறது. கம்பில் அடங்கியுள்ள சத்துகள்: சிறு தானியங்களிலேயே அதிக அளவாகக் கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் முக்கிய சத்தான ‘வைட்டமின் ஏ’ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்புப் பயிரில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள்: கால்சியம் - 42 கி, இரும்புச்சத்து - 12 மி.கி, வைட்டமின் பி - 0.38 மி.கி, ரைபோபிளேவின் - 0.21 மி.கி, நியாசின் - 2.8 மி.கி உள்ளது. மற்ற எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் இதில் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஆகும். கம்பின் மருத்துவப் பயன்கள்: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நிறைந்துள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். அதிக இரும்புச்சத்து நிறைந்தது: கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். எளிதில் செரிமானம் ஆகும் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமானக் கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும். கம்பு -நன்மைகள்: மாதவிடாய்ப் பிரச்னைக்கு தீர்வு: பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்தப் போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் கம்பு கூழ் அல்லது கம்பு சூப் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும். உடல் எடையினைக் குறைக்க உதவும்: கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளன. இந்த கம்பங்கூழைக் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். எனவே உடல் எடையினைக் குறைக்க விரும்புபவர்கள் கம்பு உணவை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படும்; மனிதர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும். அவற்றுள் ஒன்றுதான் குடல் புற்றுநோய். கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்: இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனையால் அவதிப் படுகின்றனர். அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இவ்வாறு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் இவர்களின் உடல் சூடு தனியும். இதனால் உடல் குளிர்ச்சியடையும். சர்க்கரை நோயை தடுக்க உதவும்: கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் சர்க்கரை வியாதி ஏற்படாமல் தடுக்கலாம். மலச்சிக்கலைப் போக்க உதவும்: தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. கம்பில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உண்டு வரும்பொழுது மலசிக்கல் பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது. இளமைத் தோற்றம் நீடிக்கும்: கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் தோல் பளப்பளப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
- Get link
- X
- Other Apps
Tamil motivational lines: ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு, வேற ஒரு தளபதிய நியமிக்க முடிவு செஞ்சாரு.._* _இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க.._ _ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி,_ *”இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு.. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை..”* _அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.._ _இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க, அவங்களாலயே திறக்க முடியல! நம்மால எப்பிடி முடியும்னு சிலர் கிளம்பிட்டாங்க.._ கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு..! _ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார்.._ _எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!!_ *இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது* _என ராஜா எல்லாரிடமும் கூறினார்.._ _கதவை பார்த்த பலர்.. எப்படி திறப்பது என்று தயங்கினர்..!_ _ஒருத்தன் மட்டும் கதவு அருகில் போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான்.._ *அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு..!* *பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்..!* என்ற ராஜா, *அவனை பாராட்டி தளபதி பதவியை அவனுக்கு வழங்கினார்..* 🐝 👇 _*“அது முடியாத காரியம்..”*_ _என எப்போது நம் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள்ளவேண்டும்,_ _*நாம் சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டோம் என்று..*_ ஒரு செயலை தொடங்குவதற்கு ஆரம்பித்தாலே நம்மை சுற்றி இது இப்படி ஆகிடும் அப்படி ஆகிடும்னு ஏகப்பட்ட புலம்பல்கள் எதிர்மறை தாக்கங்ள் வரவே செய்யும்.....நீங்கள் அதிலிருந்து விலகி இருந்தாலே நீங்கள் வெற்றியாளர்கள்தான்.... வெற்றி பெறுவதற்கு எப்போதும் வெற்றியாளரோடு இருங்கள் அல்லது நேர்மறை எண்ணங்களோடு இருப்பவர்களோடு பழகுங்கள் பயணியுங்கள்!...எதிர்மறையாக பேசுபவர்களோடு நீங்கள் இருந்தீர்களேயானால் உங்கள் வாழ்க்கை நூறு சதவீதம் வீணா போய்விடும் பாழா போய்விடும்...........எந்தவொரு செயலையும் உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உங்களை நம்பி உங்கள் தன்னம்பிக்கையை நம்பி மட்டுமே செயலை ஆரம்பியுங்கள்...... *_நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு._* *- Martin Luther King Jr.* 🛑 *_யார் ஒருவர் தன்னம்பிக்கையுடன்,துணிந்து தைரியத்துடன் இந்த முதலடியை எடுத்த வைக்க தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வெற்றியாளர் சாதனையாளர்......!!சரித்திரத்தில் இடம் பெறுவர்_*✅ *_🌻GOOD Morning have a successful day_*🌻
- Get link
- X
- Other Apps
Network marketing: NETWORK MARKETING BUSINESS ஐ நீங்கள் முதன் முதலில் தொடங்கும் போது.... சிரிப்பார்கள், ஏளனமாகப் பார்ப்பார்கள், கேளிக்கை செய்வார்கள்..... ஆனால் சிறிது காலத்திலேயே உங்கள் அபார வளர்ச்சியை பார்த்து என்னடா இது என்ன மாயம்டா இது என்று தலையை சொரிவார்கள்.... அதுக்கு அப்புறம் ஒருநாள் நிச்சயம் அவர்களும் இதையே தொடர்வார்கள்..... நண்பர்களே NETWORK MARKETING ல் பொறுத்தவரை நீங்கள் ஒரு விதையை போட்டு அந்த விதை முளைத்து செடியாகி மரமாகி அது காய் வைக்க வரைக்கும் தான் சிறிது உங்களுக்கு கடினமாக தெரியலாம்.... அதுக்குப்புரம் இதில் நீங்கள் பலனை அனுபவிப்பதை யாராலும் தடுக்க முடியாது.......💪🏻💪🏻 எங்கேயோ போயி எவன்கிட்டேயோ சென்று பத்தாயிரத்திற்கும் பாஞ்சாயிரத்துக்கும் வேலை செஞ்சி செஞ்சி......நீங்கள் முதலாளிக்கு காலமெல்லாம் உழைக்கிறத விட்டுட்டு நீங்கள் ஒரு சரியான NETWORK MARKETING ஐ தேர்ந்தெடுத்து குறுகிய காலத்தில் நீங்களும் கோடிஷ்வரனா வலம் வாருங்கள். வர வாய்ப்பை👉🏾 நீங்கள் சரியாக பயன்படுத்திக்கிட்டிங்கனா உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் முதலாளி👌🏻👌🏻இல்ல அதை மிஸ் பன்னிட்டா?? எவனோ ஒருத்தன் வாழ்க்கைக்கு நீங்கள் கடைசி வரைக்கும் தொழிலாளிதான் வர வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே.. நன்றி
- Get link
- X
- Other Apps
நம் வெற்றியை தடுக்க கூடிய "ஐந்து வில்லன்கள்...!" ................................................... வாழ்க்கையில் நம் முன்னேறத்தை தடுக்கக் கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள். அவைகளை மிகத் திறமையாக எதிர்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.சரி!, யார் ஐந்து வில்லன்கள்...? அந்த ஐந்து வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், சிக்கல்கள், பயம் மற்றும் தோல்வி... இப்போது, திரைப்படங்களில் வருவது போல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எப்படி எதிர்த்துக் கையாளுவோம் என்பதைக் காண்போம். மற்றும் அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று காண்போம்... "ஊக்கமின்மை" ......................................... ஊக்கமின்மை, மற்றும் உங்கள் உயர்வுக்கு உதவாத நட்பை உதறித் தள்ளுங்கள். உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நட்பு வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்... நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள். ஆழ்ந்து ஆலோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து விடுங்கள்... "மாற்றம்" ......................... நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும், அதைப் புரிந்து கொள்ளுங்கள்... மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை!, இதை மனதில் வையுங்கள். மாற்றத்திற்குத் தகுந்தாற் போல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். முரண்டு பிடிக்காதீர்கள்... "சிக்கல்கள்" ................................ சிக்கல்கள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள்!, அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே ஆலோசித்துக் கொள்ளுங்கள்,.. ஒன்றல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனை சிக்கல்களுக்கு உள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கும். தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்... ''அச்சம்" ...................... அச்சம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழையல்ல... அச்சத்தை ஏற்றுக் கொள்கிறவர்களால் தான் அந்த அச்சத்தை வெல்ல முடியும். உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எதுவென்று ஆலோசியுங்கள், அங்கே அடியுங்கள்... "தோல்வி" .......................... சறுக்கல்கள் வரும் போது, மாற்றி ஆலோசியுங்கள். தோல்வியும் வெற்றியாக்கலாம், சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்... மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் இயன்றதை மட்டும் செய்யுங்கள், சரி செய்யுங்கள்... ஆம் நண்பர்களே...! மேற்கண்ட ஐந்து வில்லன்களான, '’ஊக்கமின்மை, மாற்றம், சிக்கல்கள், அச்சம் மற்றும் தோல்வி, ’’இவற்றை திறமையாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றியடையலாம்...!
- Get link
- X
- Other Apps