Skip to main content
நம்பிக்கை: வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் *வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும்...* தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும். இமாலய சாதனைகளை கூட அவர்களால் வெல்லமுடியும். *வாழ்க்கையில் எந்த ஒருநிலையிலும், எந்த ஒரு வயதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையான உழைப்பும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அபாரமான தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்... *எது உங்கள் கனவோ ,எது உங்கள் லட்சியமோ அதற்காக அதை செய்து கொண்டே இருங்கள்...* உலகில் வெற்றி பெற்ற அனைவருக்கும், தோல்வி அடைந்த அனைவருக்கும் ஒரு வித்தியாசம் மட்டும்தான்... பணக்காரனும் தோற்று இருக்கிறான் ,ஏழையும் வென்றிருக்கிறான். எனவே, *வெற்றி பெற பணம் தடை இல்லை...* படித்தவனும் தோற்றிருக்கிறான் ,பாமரனும் வென்றிருக்கிறான். எனவே, *வெற்றி பெற படிப்பு தடை இல்லை...* வீரனும் தோற்று இருக்கிறான் ,கோழையும் வென்று இருக்கிறான். எனவே *வெற்றி பெற பலம் தடை இல்லை...* புத்திசாலியும் தோற்று இருக்கிறான், முட்டாளும் வென்று இருக்கிறான். எனவே *வெற்றி பெற அறிவு தடை இல்லை...* ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான், மாற்று திறனாளியும் வென்று இருக்கிறான்... *எல்லாம் இருந்தும் தோற்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்...* *எதுவும் இல்லாமல் வென்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்...* ஒன்று மட்டும் தான் இவர்களை பிரித்து காட்டுகிறது ,அது மட்டும் தான் வெற்றியை பெற்றுத்தருகிறது... *அது நம்பிக்கை, தன்னம்பிக்கை...* தோற்றுப்போன எவரிடமும் இல்லாத ஒன்று நம்பிக்கை... வெற்றி அடைந்த அனைவரிடமும் இருந்த ஒன்றே ஒன்று நம்பிக்கை... அந்த *நம்பிக்கை மட்டும் இருந்தால் அது வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்றுத்தரும்...* வெற்றியை அது மட்டுமே பெற்றுத்தரும் *நீயும் வெற்றி அடைவாய் ,நம்பிக்கையோடு இரு.* *வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு எப்போதும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்பட வேண்டும். அப்போது தான் எதையும் எதிர் கொள்ளும் மன நிலையை உருவாக்கி தரும்.*
Popular posts from this blog
Comments
Post a Comment