Skip to main content
Tamil motivational lines: ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு, வேற ஒரு தளபதிய நியமிக்க முடிவு செஞ்சாரு.._* _இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க.._ _ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி,_ *”இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு.. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை..”* _அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.._ _இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க, அவங்களாலயே திறக்க முடியல! நம்மால எப்பிடி முடியும்னு சிலர் கிளம்பிட்டாங்க.._ கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு..! _ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார்.._ _எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!!_ *இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது* _என ராஜா எல்லாரிடமும் கூறினார்.._ _கதவை பார்த்த பலர்.. எப்படி திறப்பது என்று தயங்கினர்..!_ _ஒருத்தன் மட்டும் கதவு அருகில் போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான்.._ *அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு..!* *பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்..!* என்ற ராஜா, *அவனை பாராட்டி தளபதி பதவியை அவனுக்கு வழங்கினார்..* 🐝 👇 _*“அது முடியாத காரியம்..”*_ _என எப்போது நம் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள்ளவேண்டும்,_ _*நாம் சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டோம் என்று..*_ ஒரு செயலை தொடங்குவதற்கு ஆரம்பித்தாலே நம்மை சுற்றி இது இப்படி ஆகிடும் அப்படி ஆகிடும்னு ஏகப்பட்ட புலம்பல்கள் எதிர்மறை தாக்கங்ள் வரவே செய்யும்.....நீங்கள் அதிலிருந்து விலகி இருந்தாலே நீங்கள் வெற்றியாளர்கள்தான்.... வெற்றி பெறுவதற்கு எப்போதும் வெற்றியாளரோடு இருங்கள் அல்லது நேர்மறை எண்ணங்களோடு இருப்பவர்களோடு பழகுங்கள் பயணியுங்கள்!...எதிர்மறையாக பேசுபவர்களோடு நீங்கள் இருந்தீர்களேயானால் உங்கள் வாழ்க்கை நூறு சதவீதம் வீணா போய்விடும் பாழா போய்விடும்...........எந்தவொரு செயலையும் உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உங்களை நம்பி உங்கள் தன்னம்பிக்கையை நம்பி மட்டுமே செயலை ஆரம்பியுங்கள்...... *_நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு._* *- Martin Luther King Jr.* 🛑 *_யார் ஒருவர் தன்னம்பிக்கையுடன்,துணிந்து தைரியத்துடன் இந்த முதலடியை எடுத்த வைக்க தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வெற்றியாளர் சாதனையாளர்......!!சரித்திரத்தில் இடம் பெறுவர்_*✅ *_🌻GOOD Morning have a successful day_*🌻
Popular posts from this blog
Comments
Post a Comment