வீட்டில் வளர்க்க கூடிய மூலிகை செடிகள்:ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள் - இயற்கை மருத்துவம் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ குணம்நிறைந்த மூலிகைச் செடிகள் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் தெரிந்துகொல்வவோம் துளசி :- * துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும். * ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும். * தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும். * சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர… பலன் கிடைக்கும். கற்றாழை :- * சோற்றுக் கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து சாப்பிடலாம். அல்லது மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம் (அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால், நன்கு கழுவிவிடவும்). இதன் மூலம் உடல் சூடு குறையும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும் * கற்றாழையின் சதைப் பகுதியை ஆண்கள், பெண்கள் அனைவரும் உடலில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்துவர, சரும வறட்சி நீங்கி தேகம் பளபளப்பாகும்; முகப் பருக்கள் குறையும். * அடிபட்ட இடங்களில் சோற்றுக் கற்றாழை சதையை வைத்துக்கட்டினால், ரத்தம் கட்டுதல் ஏற்படாது. கற்பூரவல்லி :- * கற்பூரவல்லி இலை அல்லது சாறு, சளிக்கு சிறந்த மருந்து. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்குச் சளி, ஜலதோஷம் ஏற்பட்டால், தாய்ப்பாலுடன் கற்பூரவல்லி சாற்றைக் கலந்து கொடுக்க… உடனடி குணம் கிடைக்கும். நிலவேம்பு :- * நிலவேம்புக் கஷாயம் குடித்தால் கடுமையான காய்ச்சலும், சளியும் குணமாகும். குறிப்பாக, குளிர்காலங்களில் வாரம் ஒருமுறை இதைக் குடித்துவர, காய்ச்சல் வருவது கட்டுப்படுத்தப்படுவதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், வயிற்றுப் புண் குணமாகும். * நிலவேம்புச் செடிகளின் நெடியால் வீட்டைச் சுற்றிலும் விஷ ஜந்துகள் வருவது கட்டுப்படும். தூதுவளை * அடிக்கடி மூச்சிரைத்தல், இருமல் ஏற்படுபவர்கள், நெஞ்சு சளி உள்ளவர்கள் தூதுவளை இலையுடன் இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர (வாரத்துக்கு இரு வேளை மட்டும்) நல்ல பலன் கிடைக்கும். * தூதுவளையை பொடியாகச் செய்யும்போது சத்துகள் குறைந்துவிடும் என்பதால் முடிந்தவரையில் துவையலாகச் செய்து சாப்பிடவும் பிரண்டை:- * பிரண்டையில் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் அதைச் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், அதன் மருத்துவக் குணங்கள் ஏராளம். பிரண்டையின் நரம்புபோன்ற பகுதியை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கவும். பிறகு, சாதாரண அல்லது புளித்த மோரில் சிறிது நேரம் ஊறவைக்க, அதன் காரத்தன்மை குறையும். பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து துவையல்செய்து சாப்பிட்டால்… மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் குறைந்து எலும்பு பலமாகும், வயிற்றுப் புண் குணமாகும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களின் இடுப்புவலி குறையும். * பிரண்டைத் துவையல் பசியை அதிகரிக்கும் திறன்கொண்டது. சரியாகச் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். வெற்றிலை :- * வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்க்க அதிக இடம் தேவையில்லை. அவ்வப்போது கொடியைக் கத்தரித்து தேவையான அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம். இதுவும் விஷ ஜந்துகளை அண்டவிடாது. * வெற்றிலைச் சாறு, அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். * மதியம் சாப்பிட்டவுடன் வெற்றிலையுடன் பாக்கு, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், சுண்ணாம்பு சேர்த்து வாயில்போட்டு மென்றால்… ஜீரண மண்டலம் பலம்பெறும். ஜீரணக் கோளாறுகளும், சளியும் சரியாவதுடன், தொண்டை வலியும் குணமாகும். * வெற்றிலை புகையிலைப் பொருட் களுடன் சேர்ந்தது எனவும், புற்றுநோயை உண்டாக்கும் எனவும் சிலர் நினைக்கின்றனர். வெறும் வெற்றிலை, உடலுக்கு நன்மையே செய்யும். மேலும் வெற்றிலையை மென்ற பிறகு நன்றாக வாய் கொப்பளிக்க, பற்களில் கறை படிவதும் கட்டுப்படும்’’ ‘‘அதிக இட வசதி உள்ளவர்கள் அருகம்புல், மணத்தக்காளி மற்றும் கீரை வகைகள், புதினா என்று இன்னும் சில மூலிகைகளை வளர்த்து பலன் பெறலாம். ஒரே தொட்டியில் தொடர்ந்து ஒரே செடி வளர்ப்பதைத் தவிர்த்து, ஆறு மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வேறு வேறு செடிகளை மாற்றி வளர்க்க, செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் மூலிகை வளர்ப்போம்… ஆரோக்கியம் காப்போம்

Comments

Popular posts from this blog

மரணம் ஒரு பேரானந்தம்:#மரணம் ஒரு ஆனந்தம் 🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். 🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், 🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும், 🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், 🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்! 🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, 🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! 🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம். 🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள். 🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும், 🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது! 🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், 🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!? 🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!! 🌴என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள் 🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்! 🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்! 🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும். 🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன! 🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது . நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக வாழுங்கள்.....