கம்பு மருத்துவ பயன்கள்:⚛அதிக நன்மைகள் தரும் கம்பு⚛ அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். இந்த இரண்டைப் போலவே பல சத்துகள் நிறைந்த தானியமாக ‘கம்பு’ இருக்கின்றது. இந்தக் கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பலவகையில் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பின் மருத்துவ நன்மைகள்: கம்பு ஆங்கிலத்தில் ‘Pearl Millet’ என அழைக்கப்படுகிறது. இது ஒரு புன்செய் நிலப்பயிராகும். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தைப் பிடிக்கிறது. கம்பின் வரலாறு: பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்பு ஆசிய நாடுகள், அமெரிக்க நாடுகள் எனப் பரவி இன்று சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாக விளைவிக்கபடுகிறது.. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும், மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தைக் கம்பு பிடித்திருக்கிறது. கம்பில் அடங்கியுள்ள சத்துகள்: சிறு தானியங்களிலேயே அதிக அளவாகக் கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் முக்கிய சத்தான ‘வைட்டமின் ஏ’ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்புப் பயிரில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள்: கால்சியம் - 42 கி, இரும்புச்சத்து - 12 மி.கி, வைட்டமின் பி - 0.38 மி.கி, ரைபோபிளேவின் - 0.21 மி.கி, நியாசின் - 2.8 மி.கி உள்ளது. மற்ற எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் இதில் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஆகும். கம்பின் மருத்துவப் பயன்கள்: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நிறைந்துள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். அதிக இரும்புச்சத்து நிறைந்தது: கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். எளிதில் செரிமானம் ஆகும் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமானக் கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும். கம்பு -நன்மைகள்: மாதவிடாய்ப் பிரச்னைக்கு தீர்வு: பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்தப் போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் கம்பு கூழ் அல்லது கம்பு சூப் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும். உடல் எடையினைக் குறைக்க உதவும்: கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளன. இந்த கம்பங்கூழைக் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். எனவே உடல் எடையினைக் குறைக்க விரும்புபவர்கள் கம்பு உணவை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படும்; மனிதர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும். அவற்றுள் ஒன்றுதான் குடல் புற்றுநோய். கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்: இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனையால் அவதிப் படுகின்றனர். அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இவ்வாறு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் இவர்களின் உடல் சூடு தனியும். இதனால் உடல் குளிர்ச்சியடையும். சர்க்கரை நோயை தடுக்க உதவும்: கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் சர்க்கரை வியாதி ஏற்படாமல் தடுக்கலாம். மலச்சிக்கலைப் போக்க உதவும்: தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. கம்பில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உண்டு வரும்பொழுது மலசிக்கல் பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது. இளமைத் தோற்றம் நீடிக்கும்: கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் தோல் பளப்பளப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.

Comments

Popular posts from this blog

மரணம் ஒரு பேரானந்தம்:#மரணம் ஒரு ஆனந்தம் 🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். 🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், 🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும், 🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், 🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்! 🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, 🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! 🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம். 🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள். 🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும், 🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது! 🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், 🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!? 🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!! 🌴என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள் 🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்! 🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்! 🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும். 🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன! 🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது . நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக வாழுங்கள்.....