Skip to main content
காலம் தாழ்த்தாமல் உடனடி முயற்சி: நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை பொறுத்து,நாம் எடுக்கும் முடிவை பொறுத்து தான் நாம் வெற்றியாளராவதும் தோல்வியாளராவதும் முடிவு செய்யப்படுகிறது நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது மற்றவர்களோ அல்லது பக்கத்தில் வீட்டு காரர்களோ அல்ல நண்பர்களே..... நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவே நம்முடைய வருங்கால வெற்றியை தீர்மானிக்கவல்லது குறள்: 620 அதிகாரம்: ஆள்வினை உடைமை _"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர்"_ - திருக்குறள் [ஊழை-தலைவிதி உலைவின்றி- ஊக்க குறைவின்றி, தாழாது- சிறிதும் தாமாதிக்காமல் உஞற்று- முயற்சி ] குறள் விளக்கம்: காலம் தாழ்த்தாமல் உடனடி முடிவும் + முயற்சியுமே விதியையே வெல்லக் கூடியதாக அமைகிறது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (நம்மிடம் முயற்சி என்ற ஒன்று இருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக முயற்சியை மேற்கொண்டோமானால் அந்த விதியையே புறமுதுகிட்டு ஓட வைக்க முடியும் )
Popular posts from this blog
Comments
Post a Comment