தாய் தந்தையே முதல் கடவுள்:ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, " ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!! "மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!! அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து , "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!! ஆனால் , "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.கவலைப்படாதே ....!!இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று," கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!மறுபடியும் அவன் வரவேயில்லை....!! மரம் அவனுக்காக ஏங்கியது....!! பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!! அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!! அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். "வா என்னிடம் வந்து விளையாடு"...!! "இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!அதற்கு அவன்_ இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,ஆனால் , "நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை"....!! "வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!மரம் உடனே சொன்னது , பரவாயில்லை .... "உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!அதற்கு பதில், " என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!! "இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!முடிந்த வரை, " வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!! அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!! அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!மரம் அவனை பார்த்து, " ஆனந்த கூத்தாடியது"......!!!அவன் எப்போதும் போல் , 'சோகமாக இருந்தான்'.....!!"ஏன் இப்படி இருக்கிறாய்", என்று மரம் கேட்டது.....!! "என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"...., "படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!"அதனால் வருமானம் இல்லை" "நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!மரம் துடித்து போனது,.....!!" நான் இருக்கிறேன்".....!! "என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!அவன் அடி மரத்தை வெட்டும் போது...., மறக்காதே....!!வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் ......,"எப்போதாவது என்னை பார்க்க வா".. என்றது....!!ஆனால் அவன் வரவேயில்லை.....!! மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!அப்போது அவன் வந்தான்.....!!! 'தலையெல்லாம் நரைத்து' , 'கூன் விழுந்து' , 'மிகவும் வயதான தோற்றத்துடன்'... , அவன் இருந்தான்.....!!"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!"கிளைகள் இல்லை"........!!!"அடி மரமும் இல்லை".........!! உனக்கு கொடுக்க, "என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!அவன் சொன்னான் ,நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' , அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!! வீடு கட்டவும் ,படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை....!! "எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!அப்படியா....!!! இதோ...., " தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!! "அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!இந்த சுகத்துக்கு தான்...... "அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!! "அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!"இது மரத்தின் கதையல்ல"....!! " நம் பெற்றோர்களின் கதை"....!! இந்த சிறுவனை போல் ,"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!! வளர்ந்து பெரியவனானதும்..., தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ,"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!"நம்மிடம் இருப்பவை எல்லாம்", " அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"🌳 "நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது"🌳 "நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர"🌳 "அவர்கள் விரும்புவதும் அதைதான்" தாய் தந்தையர்கள் இருக்கும் போதே சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து விடுங்கள்.பெற்றோரின் அருமை அவர்களை இழந்தபின்னே பலருக்கு புரிய வரும். அவர்கள் தம்முடன் இருக்கும் காலமே நமக்கு பொன்னான காலம் ஆகும்.🌳

Comments

Popular posts from this blog

மரணம் ஒரு பேரானந்தம்:#மரணம் ஒரு ஆனந்தம் 🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். 🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், 🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும், 🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், 🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்! 🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, 🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! 🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம். 🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள். 🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும், 🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது! 🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், 🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!? 🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!! 🌴என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள் 🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்! 🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்! 🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும். 🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன! 🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது . நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக வாழுங்கள்.....