Skip to main content
தாய் தந்தை: ஒவ்வொருவரும் *தாய் தந்தையரை* அவர்கள் இருக்கும் வரை முதல் கடவுள்களாக நினைத்து வணங்குங்கள்.அவர்களை நன்றாக *கவனித்து* கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களே உங்களிடம் அன்றாடம் கண் முன் இருந்து அடிக்கடி பேசும் முதல் தெய்வங்கள். (மாதா-அம்மா,பிதா-அப்பா,குரு, தெய்வம்). அவர்களின் மனதை புண்படும்படியான வார்த்தைகளை பேசாதீர்கள்.அவர்களின் சந்தோசமே உங்களின் சந்தோசமாக பாருங்கள்.அவர்களுக்கு தேவையானது எது என்பதை அறிந்து செய்யுங்கள்.அவர்களின் மன மகிழ்ச்சியே உங்களுக்கு பரிபூரண அருளை வழங்க கூடியது. *அப்பா அம்மாவின் ஆசிர்வாதம்* இல்லாமல், அவர்களின் சந்தோசத்தை மகிழ்ச்சியை பெறாமல் நீங்கள் எந்த *கோயில் குளம்* சென்று அங்கே கடவுளை வணங்கினாலும் அங்கு *கடவுளின் அருள்* உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்காது. தாய் தந்தையரை சந்தோசமாக வைத்துக் கொண்டு அவர்களின் ஆசியை பெறுபவர்களிக்கே *திருவருள்* (கடவுளின் )கிடைக்கின்றது. தாய் தந்தையர்கள் வாழும் போது *அவர்களை கவனிக்காமல்* அவர்களுக்கு *உணவு உடை உறைவிடம்* இல்லாமல் தனியே தவிக்கவிடுவது அவர்களை மனம் வருத்தும் படி செய்யும் பிள்ளைகள் இருந்தும் *இறந்ததற்கு சமமான* ஒன்றே ஆதலால் *தாய் தந்தையர்கள்* வாழும் போது அவர்களை *மகிழ்ச்சியாக வைத்து* கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பது உங்களின் *அன்பான வார்த்தைகளையே.* இழந்தால் திரும்ப நமக்கு கிடைக்காதது நேரம் மட்டும் அல்ல. *தாய் தந்தையர்கள்* உங்களோடு அருகில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கும் *அந்த தருணம்* கூடம் தான்..... இதை *அவர்கள் இருக்கும்* போது சிலர் உணர மாட்டார்கள்.அவர்கள் *நம்மிடம் இல்லாத* போதே உணர்வார்கள். *உங்களின் பிறந்தநாள், உங்களின் திருமண நாள்* போன்ற விஷேச நாட்களில் அவர்களின் *கால்களில் பணிந்து* அவர்களின் ஆசியை பெற முயற்சியுங்கள். இது கோயில்களிலே கொடிமரத்தின் அருகிலே கடவுளை விழுந்து வணங்கும் பலன்களை காட்டிலும் *பல மடங்கு பலன்களை* உங்களுக்கு பெற்று கொடுக்கும்.அந்த பொன்னான தருணம் அவர்கள் வாழும் போதே அவர்கள் நம்மிடம் இருக்கும் போதே பெற்று கொள்ள ஒவ்வொருவரும் முயற்சியுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மை விட்டு *தேவலோகம்* சென்று விட்டால் மறுபடியும் அந்த பொன்னான வாய்ப்பும் நமக்கு திரும்ப சத்தியமாக கிடைக்காது. இழந்தால் திரும்பவும் *கிடைக்காது இதுவும்😓*😪 ஒன்றாகும். வாழும் போதே *தாய் தந்தையோடு* மிகழ்ச்சியாக இருக்கும் தருணமே இவ்வுலகில் ஒருவருக்கு கிடைத்தர்கரிய அரிய பேறாகும். அதை அவர்களுடன் வாழும் போதே அனுபவித்து விடுங்கள். மறுபடியும் வேண்டினாலும் கிடைக்காது. *_நம் தாய் தந்தை நம்மை முதல் முதல்முதலில் பெற்றெடுக்கும் போது அவர்கள் அந்த நொடியில் பெறும் சந்தோசத்தை....... அவர்களோடு நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்_* *பெற்றோருடன் மகிழ்ச்சியாக* இருக்கும் அந்த *இனிமையான தருணங்களே* இவ்வுலகில் ஒருவர் *பெறும் பேறுகளில் தலைசிறந்தாகும்.*🙏.....
Popular posts from this blog
Comments
Post a Comment