மகிழ்ச்சியளித்து மகிழ்தல் என்பது உன்னதமான ஆன்மிக அனுபவங்களுள் ஒன்று. இறைவன் இந்த உலகில் அமைத்த நியதிகளுள் இதுவும் அடங்கும்.... : தேவையுடையவர்களுக்கு, சிரமப்படுபவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. இங்கு மனிதர்கள் யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ முடியாது.... : மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள். சார்பு வாழ்க்கை இங்கு அவசியமான ஒன்று. சார்பு வாழ்க்கை இழிவானது அல்ல. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் மற்றவர்களுக்கு அவசியமான ஏதேனும் ஒரு பண்பு இருக்கிறது.... : நான் யாரிடமும் எந்த தேவையும் அற்றவன் என்று ஒருவன் அகந்தையுடன் கூறுவது அவனை சமூகத்தை விட்டு தனித்தவனாக, விலகியவனாக ஆக்கிவிடும். சக மனிதர்கள் அவனை ஒதுக்கி விடுவார்கள் அல்லது அவனிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஒதுக்கப்பட்டவனை வெறுமையுணர்வும் தனிமையுணர்வும் சூழ்ந்து கொள்ளும்.... : “நீங்கள் உங்கள் சகோதரரின் துன்பத்தைப் போக்கினால் அல்லாஹ் உங்களின் துன்பங்களைப் போக்குவான்” என்றும் “நீங்கள் உதவி செய்தால் உதவி செய்யப்படுவீர்கள்” என்றும் கூறுகிறார்கள் நபியவர்கள். : உதவி என்பது பல வகைப்படும். அது வெறுமனே பண ரீதியான உதவியை மட்டும் குறிப்பது அல்ல.... : மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் உதவி தான். அறியாதவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பதும் உதவி தான். பாதையில் கிடக்கும் தீங்கான பொருட்களை அகற்றுவதும் உதவி தான். நல்வழி காட்டுவதும் உதவி தான். நல்ல வார்த்தை கூறுவதும் உதவி தான். மலர்ந்த முகத்துடன் உங்கள் சகோதரர்களை சந்திப்பதும் உதவி தான்..... : மற்றவர்களை உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் உதவி தான். உங்களிடமிருந்து வெளிப்படும் புன்னகை சட்டென சக மனிதனின் மன இறுக்கத்தை தளர்த்துகிறது எனில், அதுவும் உதவி தான். இப்படி உங்களால் இலகுவாக செய்ய முடிந்த ஒவ்வொரு நற்செயலும் உதவி தான்...

Comments

Popular posts from this blog

மரணம் ஒரு பேரானந்தம்:#மரணம் ஒரு ஆனந்தம் 🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். 🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், 🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும், 🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், 🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்! 🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, 🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! 🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம். 🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள். 🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும், 🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது! 🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், 🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!? 🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!! 🌴என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள் 🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்! 🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்! 🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும். 🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன! 🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது . நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக வாழுங்கள்.....